சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

முதல் டைனோசர் முட்டை

கிழக்கு ஆசியாவின் பெரிய பாலைவனம் 'கோபி பாலைவனம்'. இது சீனாவின் வட கிழக்கு பகுதி முதல் மங்கோலியாவின் தெற்கு பகுதி வரை பரவி உள்ளது. இதன் பெரும்பாலான பகுதி மணல் பாங்காக இல்லாமல், கற்பாங்காகவே உள்ளது. இதன் பரப்பளவு 12.95 லட்சம் சதுர கி.மீ. நீளம் 1,500 கி.மீ. அகலம் 800 கி.மீ. கடல் மட்டத்தில் இருந்து 2,990 முதல் 4,990 அடி வரையிலான உயரத்தில் அமைந்துள்ளது. இதன் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 194 மி.மீ. இங்கு பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் டைனோசர் முட்டையும் அடங்கும்.

தகவல் சுரங்கம்: நிலவில் மனிதன்

மனிதன் முதன்முதலில் நிலவில் காலடி வைத்த தினம் இன்று. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா சார்பில் 1969, ஜூலை 16ல், 'அப்பல்லோ-11' என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய விண்வெளி வீரர்கள் பயணித்தனர். இது ஜூலை 20 (இந்திய நேரம் நள்ளிரவு 12.48 மணிக்கு) நிலவில் இறங்கியது. 6 மணி நேரம் கழித்து, நீல் ஆம்ஸ்ட்ராங் விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் காலடி வைத்தார். அமெரிக்க தேசியக் கொடியையும் நிலவில் பறக்க விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X