சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாட்ஜ் அறைக்கு கட்டணம் செலுத்தாததால் டாக்டர்களை வெளியேற்றிய மேலாளர்

Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தர்மபுரி: தங்கியுள்ள அறைகளுக்கு, கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி, டாக்டர்களை வெளியேற்றிய லாட்ஜ் மேலாளரால், பரபரப்பு ஏற்பட்டது.


தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. இங்கு, 60க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணிபுரிகின்றனர். டாக்டர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லும் முன், தர்மபுரியில் ஒரு தனியார் லாட்ஜில் தனிமைப்படுத்தப்பட்ட பின், வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா மையத்தில் பணியாற்றிய, 30 டாக்டர்கள் தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே உள்ள, ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களாக தங்கியுள்ளனர். இந்நிலையில், லாட்ஜ் மேலாளர் ஒருவர், டாக்டர்கள் தங்கியுள்ள அறைகளுக்கு கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி, 30 டாக்டர்களை நேற்று காலை, 10:30 மணியளவில் வெளியேறும்படி கூறியுள்ளார். மேலும், டாக்டர்களுக்கு காலை உணவும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிருப்தியடைந்த டாக்டர்கள், மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து, லாட்ஜில் இருந்து வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவக்கல்லூரி நிர்வாகம், லாட்ஜ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து, டாக்டர்கள் மீண்டும் அந்த லாட்ஜில், ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.

இதுகுறித்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி கூறியதாவது: டாக்டர்கள் தங்கியுள்ள, அறைகளுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் அறியாத லாட்ஜ் மேலாளர், டாக்டர்களை காலி செய்யும்படி கூறியுள்ளார். இதுகுறித்து, தகவல் கிடைத்தவுடன், லாட்ஜ் உரிமையாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, டாக்டர்கள் அங்கேயே தங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், அரசின் அறிவுறுத்தல்படி, தர்மபுரி மருத்துவமனை நிர்வாகம் செய்து தர தயராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Ganesan - Chennai,இந்தியா
20-ஜூலை-202010:05:08 IST Report Abuse
Narayanan Ganesan மருத்துவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது. அவர்கள் நாள் முழுதும் அணியும் பாதுகாப்பு உடைகளை நாம் இருந்து நிமிடம் கூட போட்டிருக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X