பொது செய்தி

தமிழ்நாடு

மாணவி உட்பட நால்வருக்கு கொரோனா: கொளப்பலூரில் நர்சிங் கல்லூரிக்கு 'சீல்'

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கோபி: கோபியில் மாணவி உட்பட, நான்கு பேருக்கு தொற்று உறுதியானதால், நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி, வாய்க்கால்ரோடு அருகே, கருமாயா வீதியை சேர்ந்த, 53 வயது ஆண்; கோபி, 30வது வார்டு சங்கரன் வீதியை சேர்ந்த, 25 வயது பெண்; மொடச்சூர் அருகே மில் ரோட்டை சேர்ந்த, 70 வயது முதியவர், ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. கோபி அருகே கொளப்பலூரில், தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான, 25 வயது பெண், விடுதியில் தங்கி படிக்கிறார். அவருக்கு நேற்று தொற்று உறுதியானது. இதனால் விடுதி, கல்லூரி பணியாளர்கள் உட்பட, 32 பேருக்கு, நேற்று சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இதையடுத்து நர்சிங் கல்லூரியை, வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். கோபி டவுனில் இதுவரை, 33 பேர், கிராமங்களில் ஐந்து பேர் என, 38 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X