பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை; தந்தங்கள் மாயமானதால் விசாரணை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஓசூர்: உரிகம் வனச்சரக பகுதியில், இறந்து கிடந்த ஆண் யானையின் தந்தங்கள் மாயமானதால், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரக பகுதியில், தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இயற்கையாக உயிரிழக்கும், யானைகளின் தந்தங்களும் வெட்டி எடுத்து கடத்தப்படுகின்றன. கடந்தாண்டு டிசம்பரில், உரிகம் வனப்பகுதிக்கு உட்பட்ட பிலிக்கல் வனப்பகுதியில், 40 வயது ஆண் யானை உயிரிழந்தது. அதன் தந்தங்களை, மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். அதேபோல், மேலும் இரு யானைகளை கொன்று, தந்தங்களை மர்ம கும்பல் வெட்டி எடுத்து சென்றதாக புகார் எழுந்தது. முழுமையாக விசாரிக்காத வனத்துறை அதிகாரிகள், சரியாக ரோந்து பணி மேற்கொள்ளவில்லை எனக்கூறி வனவர் வேணு, வனகாப்பாளர் மாணிக்கம் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்தனர். இந்நிலையில் உரிகம் வனச்சரகம், தாண்டியம் அடுத்த பிலிக்கல் வனப்பகுதியில், 22 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடப்பதாக கடந்த,17ல் மாவட்ட வன அலுவலர் பிரபு, வனச்சரகர் வெங்கடாசலம் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத்துறையினர், அழுகிய நிலையில் இருந்த யானை சடலத்தை மீட்டனர். ஆனால், யானையின் உடலில் தந்தங்கள் இல்லை. உடனடியாக, யானைக்கு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது. யானையை கொன்று தான், தந்தங்கள் எடுத்து செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இயற்கையாக இறந்த யானையின் உடலில் இருந்து, தந்தங்களை வெட்டி எடுத்து சென்றுள்ளனர் என, வனத்துறையினர் தரப்பில் கூறுகின்றனர். உரிகம் வனப்பகுதியில் யானைகள் இறப்பதும், தந்தங்களை கடத்தி செல்வதும் தொடர்கதையாக உள்ளது. இது குறித்து வனத்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X