பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம், கர்நாடகாவில் முழு ஊரடங்கு: மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஓசூர்: தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இரு மாநில எல்லைகளில் பலத்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கர்நாடகா சென்ற இ -பாஸ் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.


தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் உள்ள ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டியில், முழு ஊரடங்கால், மெடிக்கல் ஸ்டோர் தவிர, 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்தது. தமிழக எல்லையான ஜூஜூவாடியில், பிற மாநிலத்தில் இருந்து, இ -பாஸ் அனுமதியுடன் வந்த அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. கர்நாடகா மாநிலத்தில் கடந்த, 14 இரவு, 8:00 மணி முதல், வரும், 22 அதிகாலை, 5:00 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்றும், மருத்துவம், இறப்பு போன்ற முக்கிய காரணங்களுக்கு மட்டும், இ- பாஸ் இருந்தால், தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை, அம்மாநில அதிகாரிகள் அனுமதித்தனர். வேறு காரணங்களுக்காக இ- பாஸ் வாங்கி சென்றவர்களை, அம்மாநில எல்லையான அத்திப் பள்ளியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்சென்ற லாரி உள்ளிட்ட வாகனங்கள் எந்த தடையுமின்றி சென்றன. முழு ஊரடங்கால், இரு மாநில எல்லையில் பலத்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X