சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கருப்பர் கூட்டத்தை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சேலம்: சமூக வலைதளத்தில், ஹிந்து கடவுளை தவறாக சித்தரித்த, கருப்பர் கூட்டத்தினர், 10 பேர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்தனர். சேலம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 47. நகை மதிப்பீட்டாளரான இவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமாரிடம் அளித்த புகார்: சமீபகாலமாக, 'கருப்பர் கூட்டம்' பெயரிலான அமைப்பினர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், யு டியூப்பில், ஹிந்து கடவுள்களை அவதூறாக சித்தரிக்கின்றனர். இந்திரனை தவறாக சித்தரித்து படங்களை வெளியிட்டதோடு, புராணம், இதிகாசங்களை அசிங்கப்படுத்தி அவதூறு பரப்புகின்றனர். ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி, கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கும், கருப்பர் கூட்டத்தால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ, ஆடியோ காட்சிகள், படங்களை, உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கலவரத்தை தூண்டும்படி பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரித்த, சைபர் கிரைம் போலீசார், சென்னையை சேர்ந்த சுரேந்திரன் உள்பட, 10 பேர் மீது, ஆபாச வார்த்தையால் திட்டுதல், மத கலவரத்தை ஏற்படுத்தும்படி செயல்படுதல், மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் செயலில் ஈடுபடுதல் பிரிவுகளில், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X