பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 3,588 கனஅடியாக உயர்வு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 3,588 கனஅடியாக உயர்ந்தது. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, கடந்த, 10 முதல் வினாடிக்கு, 4,500 கனஅடி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதன் ஒரு பகுதி வந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து, சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், வினாடிக்கு, 2,535 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 3,588 கனஅடியாக அதிகரித்தது. வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. இதனால், நேற்று முன்தினம், 70.65 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 69.99 அடியாக சரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X