பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் 190 பேர் கொரோனாவால் பாதிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், நேற்று சத்துவாச்சாரி, சேண்பாக்கம், தோட்டப்பாளையம், காட்பாடி, காங்கேயநல்லூர், பாகாயம், ஓட்டேரி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில், 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அனைவரும் வேலூர், குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 4,057 ஆக உயர்ந்துள்ளது.

* வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த, 59 வயது ஆண், கழிஞ்சூரை சேர்ந்த, 49 வயது ஆண், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில், 49 வயது மாற்றுத் திறனாளி ஆசிரியர், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில், 55 வயது ஆண் என, நான்கு பேர் நேற்று முன்தினம் வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இறந்தனர்.


* ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆற்காடு, கீழ்மின்னல், ராணிப்பேட்டை என மாவட்டத்தில், 151 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 2,164 ஆக உயர்ந்துள்ளது.


* திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், பொம்மிக்குப்பம் என, 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 636 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X