கொரோனா ஏற்படுத்திய கல்வி நெருக்கடிகள்

Added : ஜூலை 20, 2020 | |
Advertisement
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவதால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் 30 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் தெரிவித்துள்ளார். தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் மார்ச் 16 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத்தேர்வுகளை மாநில அரசும், மத்திய அரசும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான ஒரு
கொரோனா ஏற்படுத்திய கல்வி நெருக்கடிகள்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவதால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் 30 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் மார்ச் 16 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத்தேர்வுகளை மாநில அரசும், மத்திய அரசும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்கிற அறிவிப்பினை தமிழ்நாடு அரசு அறிவித்தது.

புதிய கல்வியாண்டான ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். கொரோனாவால் அதற்குரிய வாய்ப்பு இல்லாமல் போனது. கல்வி வேலைநாட்கள் குறைப்பால் பாடத்திட்டத்தையும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததால், இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டது.எதிர்ப்பும் ஆதரவும்

சி.பி.எஸ்.இ., தன்னுடைய பாடத்திட்டத்தை மீளாய்வு செய்து பாடத்திட்டத்தின் அளவைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 சதவீதம் வரை பாடத் திட்டத்தைக் குறைத்து அமல்படுத்தப்பட வேண்டும். இருந்தபோதிலும், முக்கிய பாடங்களின் கருத்துருக்கள் இவற்றில் அவசியம் இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதில் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் இருக்கிறது.

கற்றலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முக்கியமான உள்ளடக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு, பாடத்திட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து 30 சதவீதம் வரை குறைக்க முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இதைப்போலவே மாநில பொதுக்கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அடிப்படையில் முதன்மைப் பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு.பாடத்தொகுப்பு

தற்போது மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள், மூன்று முதன்மைப் பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது, அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நான்கு பாடத் தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதித்து அரசு ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் குழந்தைகள் ஆன்லைன் படிப்புகளைப் படிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கத் தொடங்கி உள்ளனர். அதில் சில பேரின் ஆதரவும், எதிர்ப்பும் இயல்பாகவே இருக்கிறது.

ஆன்லைன் பாடங்களைத் தயாரிக்கும்படி சில கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அதற்கேற்ற பாடங்களை உருவாக்கும் அனுபவம் இல்லை. இதைப்போலவே, பல்கலைகளிலும், கல்லுாரிகளிலும் இணைய வகுப்புகள் வழியாக மாணவர்களுக்குப் பாடம் நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறுகின்றன. அதற்காக இவற்றையெல்லாம் பார்த்து நாம் சோர்வடையக் கூடாது.மாற்றம் தேவையா

கல்வியின் நோக்கத்தை சிந்தித்து பயனுள்ள பொருத்தமான கேள்விகளை எழுப்ப ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், மாணவர்களையும் முதல்முறையாக இந்த நெருக்கடியான காலகட்டம் துாண்டி இருக்கிறது. கல்வி குறித்தான வேறொரு பார்வை இப்போது நமக்கு கிடைத்திருக்கிறது.

நம்முடைய கற்றல் முறையில் வேறு மாற்றங்கள் தேவையா?இந்தக் கற்றல் முறை நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா? தேர்வுத்தாள்களை வைத்தே நாம் மாணவர்களை எடை போடுகிறோம். ஆனால் தற்போதைய சிந்தனையில் மாணவர்களின் அறிவும், திறனும் எப்படி மதிப்பீடு செய்யப்பட வேண்டும். லட்சக்கணக்கான இந்திய மாணவர்களிடம் கணினியோ, இணைய வசதியோ இல்லை.

அப்படியானால் ஆன்லைன் கல்வித்திட்டம் நிறைவேற்றுவதற்கு வழி இருக்கிறதா? வீட்டில் இருந்து கற்கும் முறை மாணவர்களுடைய ஒழுக்கத்தை, ஒரு கூட்டுறவை, ஒரு நற்பண்பை, சகமாணவர்களுடனான நட்பை தனது பால்ய காலத்தின் வசந்தகால வாழ்க்கையைஇழக்க நேரிடலாம் அல்லவா?

சுயசார்புமாணவர்களின் சுயசார்பு என்பது முக்கியம். அதற்காக ஆசிரியர்களைச் சார்ந்து கற்பது என்பது ஒரு பாரம்பரியக் கல்வியின் முறை அல்லவா! இது போன்று எண்ணற்ற கேள்விகள் நம் முன்னாலே எழுகிறது. தொலைநிலைக்கல்வி, வீட்டுக் கல்வி முறை, இணையவழிக்கற்றல், டிஜிட்டல் கல்வி ஆகிய முறைகளும், அவற்றுக்கான பேச்சுக்களும் தற்போது தொடங்கி இருக்கின்றன.

டில்லி அரசு கூட பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அண்மையில் அறிவித்தது.ஆனால் அதற்குரிய வசதிகள், பெருவாரியான மாணவர்களிடம் இல்லாத காரணத்தினால், அது சாத்தியப்படாது என்று ஆசிரியர்கள் தெரிவித்துவிட்டனர்.

நாட்டில் வாழும் அனைவருக்கும் சமமான கல்வி என்பதுதான் ஒரு சமூக நீதிக்கான வழிகோலாக அமையும். மின்கற்றல் முறை, இணைய கல்வித்திட்டம், டிஜிட்டல் கல்வி எல்லாம் ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசத்தைக் கொண்டு வருவதற்கான வழியாகவும், ஏற்றத்தாழ்வுகளுக்கு இட்டுச் செல்லும் வழியாகவும் அமைந்து விடுகிற சவலாகவே நம்முன்னால் நிற்கும்.புத்திசாலித்தனம்


இணையவழிக் கல்வியின் மூலமாக, புறநகர், கிராமப்புறப் பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் இவற்றைச் சிறப்பான முறையிலே நடத்திட முடியுமா? ஏனென்றால் பலருக்கு கணினி, இணைய வசதி கிடைக்கப்பெறவில்லை. கூகுள், கிளாஸ் ரூம் போன்ற ஆன்லைன் அம்சங்கள் போன்றவை இங்கு இன்னும் சரியாகப் பயன்படுத்துகிற அளவுக்கு வகுப்பறைகள் இல்லை.

எல்லாஅமைப்புகளுக்கும் பலம், பலவீனம் என்பது இருக்கத்தான் செய்யும். இவற்றை நாம் புத்திசாலித்தனமாக அணுகுவது என்பது, பலத்தை அதிகரிப்பதும், பலவீனத்தைக் குறைப்பதும் அறிவார்ந்த செயல்பாடாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்த வரையில், ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு சமூக செயல்பாடுகளில் ஈடுபடக்கூடிய ஒரு மையப்புள்ளியாக கல்விநிலையங்கள் செயல்படுகின்றன.

இன்று அந்த வாய்ப்புகள் இல்லாமல், சமூக ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு மாணவச் செல்வங்கள் இருக்கிறார்கள்.சக மாணவர்களுடன் விளையாடுவது, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது, சவால்களைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வது, ஆசிரியர்களுடன் கலந்து பேசி சமூகத்தில் ஏற்படும் பல சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்வது என்கிற ஒரு நிலைப்பாடுதான் பள்ளிக் கூடங்களில் இருந்து மாணவர்களுக்கு கிடைக்கிறது.மாணவர் முன்னேற்றம்


போர் நடக்கின்ற நாட்டில் பள்ளிக்கூடங்கள் இயங்காத ஒரு சூழலில் அந்த நாட்டில் மாணவர்களின் நிலை எவ்வாறாக உள்ளது? என்று சிந்தித்துப் பார்த்தால் பெரும் அச்சம் ஏற்படுகிறது. போர் நெருக்கடி நிலவும் நாடுகளில் பள்ளிக்கூடங்கள் செல்லாத பிள்ளைகள், ஆயுதக் குழுக்களோடு இணைந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள். இன்னும் சில நாடுகளில், பெண் குழந்தைகள் இளைமையிலேயே திருமண பந்தத்திற்கு ஆட்படுத்தப்பட்டு அவர்கள் கல்வி கற்பதற்கான ஒரு சூழ்நிலையே இல்லாமல் செய்து விடுகின்றனர்.

இப்போது அப்படி ஒரு அச்சம் இல்லையென்றாலும் கூட, மாணவர்கள் பயிற்சி நிலையில் இருந்து விலகி விடக்கூடாது. சில நாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்கின்றன. விட்ட இடத்தில் இருந்து தொடங்குவதும், அல்லது முற்றிலுமாக பழைய நிலைக்கே மீண்டு வருவதும் சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது.

இதன்மூலம் இந்த உலகம் ஒன்றை கற்றுக் கொண்டாக வேண்டும். இதுவரை நாம் அறிந்த கல்வி என்பது, இனிமேலும் அவ்வாறாக இருக்கப் போவதில்லை.பள்ளிக்கூடங்களும், அதன் கோட்பாட்டு நெறிமுறைகளும் பற்றி ஒரு மீள்பார்வைக்கு இந்த உலகம் புதிதாக சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது. இது நமது எதிர்காலத்துக்கானது. மாணவர்களின் முன்னேற்றத்தை தீர்மானிக்கக் கூடியதானது.

முனைவர் வைகைச்செல்வன்
முன்னாள் அமைச்சர்
தமிழ்நாடு அரசு
mlamailid@gmail.com


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X