அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியர்களின் ஓட்டு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
US, Presidential Election, united states elections, அமெரிக்கா, அதிபர், தேர்தல், இந்தியர்கள், ஓட்டு

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் தேர்தலில், சில மாகாணங்களில் இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்,'' என, ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தாமஸ் பெரேஷ் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடக்கவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சர்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் மந்தநிலையில் உள்ளது. ஆனாலும், அவ்வப்போது, முக்கிய நகரங்களில் இருவரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், ஜனநாயக கட்சியின் தேசிய கமிட்டி தலைவர் தாமஸ் பெரேஷ் கூறியதாவது: மிச்சிகன் மாகாணத்தில் மட்டும், 1.25 லட்சம் இந்திய வம்சாவளி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த அதிபர் தேர்தலில், இந்த மாகாணத்தில், எங்கள் கட்சி, 10 ஆயிரத்து, 700 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹிலாரி கிளின்டன் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு, இது முக்கிய காரணமாக இருந்தது.

இதேபோல், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களிலும் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது. எனவே, இந்த தேர்தலில் இங்கு அதிக ஓட்டுகளை பெறுவதற்கு மிகவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்த மாகாணங்களில் அதிக அளவில் வசிக்கும் இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டுகள், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news


அமெரிக்க துாதரகத்தின் முன்னாள் அதிகாரி ரிச்சர்ட் வர்மா கூறியதாவது: ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் வெற்றி பெற்றால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கான உதவுவார்.இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவார். இந்த விஷயத்தில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-202017:25:56 IST Report Abuse
Mahesh ஜோ பைடன் இந்தியாவுக்கு ஆதரவாக பேசாமல் காஷ்மீரில் நீக்கப்பட்ட உரிமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தால், இந்தியா வம்சாவளியினரின் வோட்டு கிடைக்காது...
Rate this:
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
20-ஜூலை-202016:08:19 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை பஞ்சம் பொழைக்க போன இடத்துல என்ன அரசியல் வேண்டிக்கிடக்கு ?
Rate this:
Cancel
Ravi - Danbury,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-202015:48:19 IST Report Abuse
Ravi அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் யாவரும் எந்த கட்சில் இருந்தாலும் வேற்றுமைகளை மறந்து டிரம்ப் ஐ மறுபடியும் அதிபராக ஆக்கவேண்டும் இதுதான் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கும், அமெரிக்காவுக்கும், இந்தியாவிற்கும் நல்லது. பிடன் ஒரு ஸ்திரமட்ரவர், அவரய் சூழ்ந்துள்ளவர்கள் இந்தியாவின் எதிரிகளாகிய கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமைவாதிகள் பிடன் வந்தால் இப்போதுள்ள சீனா எதிர்ப்பு எல்லாம் காணாமல் போகும் இஸ்லாமியஆதிக்கம் அதிகமாகும். வரைமுறை அற்ற illegal குடியேற்றம் ஏற்படும். இதுவரை சீனாவை வளர்த்து விட்டவர்கள் டெமோகிராட் கட்சியை சார்ந்த அதிபர்கள் பிடன் வந்த இந்தியாவின் எதிரிகளை ஊக்கிவிப்பர் இன்னும் கலவரக்காரர்கள் இன்னும் பலம் பெறுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X