கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட எஸ்.ஐ., - போலீசுக்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட எஸ்.ஐ., - போலீசுக்கு வரவேற்பு

Added : ஜூலை 20, 2020
Share

கரூர்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணம் பெற்று, நேற்று பணிக்கு திரும்பிய எஸ்.ஐ., மற்றும் போலீசுக்கு பூங்கொத்து கொடுத்து, எஸ்.பி., பகலவன் வரவேற்றார்.


கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., கார்த்தி, போலீஸ் சேது ஆகியோருக்கு, கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்பினர். விடுமுறைக்கு பிறகு நேற்று பணிக்கு திரும்பிய, எஸ்.ஐ., கார்த்தி, போலீஸ் சேது ஆகியோருக்கு, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, போலீசார் வரிசையாக நின்று கைதட்டி இருவரையும் வரவேற்றனர். எஸ்.ஐ., கார்த்தி, போலீஸ் சேது ஆகியோருக்கு, எஸ்.பி., பகலவன் பூங்கொத்து வழங்கி, சால்வை அணிவித்து ஊரடங்கு காலத்தில், சிறப்பாக பணி புரிந்தமைக்கு சான்று வழங்கினார். பிறகு, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி., ஆனி விஜயா உத்தரவுபடி, போலீசாருக்கு இரண்டு முட்டை, நிலக்கடலை பர்பி, வெற்றிலை, மிளகு, சீரகம் அடங்கிய உணவு கலவையை எஸ்.பி., பகலவன் வழங்கினார். அப்போது, டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், சந்திரசேகரன், அன்பு செல்வன் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X