பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரித்து வரும் அமராவதி அணை நீர்மட்டம்: ஆற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கரூர்: அமராவதி அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என, கரூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் அமராவதி அணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையில், 4,047 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். இதன் மூலம், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில், 57 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதில், கரூர் மாவட்டத்தில் மட்டும், 17 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மஞ்சள், வாழை, நெல், சூரியகாந்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும், அரவக்குறிச்சி, க.பரமத்தி, கரூர், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால், அணை நீர்மட்டம் விரைவாக உயர துவங்கியுள்ளது. எனவே, விவசாய பணிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என, கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், விவசாய பணி மற்றும் குடிநீர் தேவைக்காக, அமராவதி அணை, மேட்டூர் அணையை நம்பியுள்ளோம். கடந்த, 2011க்கு பிறகு கடந்த மாதம், 12ல் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியாற்று பகுதிகளில், குறுவை சாகுபடி துவங்கியுள்ளது. இந்நிலையில், அமராவதி அணை நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த, ஒரு மாதத்தில், 26.94 அடியில் இருந்து, 44 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும். பாலைவனம் போல காட்சியளிக்கும் அமராவதி ஆற்றில், தண்ணீர் திறந்து விடும் பட்சத்தில், அரவக்குறிச்சி உள்ளிட்ட, நான்கு பஞ்சாயத்து யூனியன் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X