தமிழ்நாடு

மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு: கரூர் நகரில் கடைகள் மூடல்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கரூர்: மூன்றாவது வாரமாக, முழு ஊரடங்கு காரணமாக, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், கரூர் நகரபகுதி வெறிச்சோடி காணப்பட்டது.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச், 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில், 34 வகையான தொழில் நிறுவனங்கள் இயங்கி கொள்ள, கட்டுபாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு மாதத்தில் ஞாயிறுக்கிழமைகளில் மட்டும், முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என, தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று, மூன்றாவது வாரமாக கரூர் நகரம், தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரம், நொய்யல், புன்னம் சத்திரம், வேலாயுதம் பாளையம், வாங்கல், வெள்ளியணை, புலியூர், உப்பிடமங்கலம், வெங்கமேடு, பசுபதி பாளையம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் மருந்து கடைகளை தவிர, மற்ற கடைகள் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்குகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கரூர் நகரப்பகுதிகளில் எப்போதும், பரபரப்பாக இருக்கும், ஜவஹர் பஜார், காமராஜ் தினசரி மார்க்கெட், உழவர் சந்தை சாலை, கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில், ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. முக்கிய பகுதிகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், எஸ்.பி., பகலவன், தாசில்தார் அமுதா ஆகியோர் நேற்று, கரூர் நகரப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, பழையஜெயங்கொண்டம், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், மாயனூர் ஆகிய இடங்களில், முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள் மட்டும் செயல்பட்டன. மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஊடரங்கு பணியில், போலீசார் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X