பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன்களில் மொபைல் எண்ணுடன் போர்டு: எஸ்.பி., தகவல்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கரூர்: '' கரூர் மாவட்டத்தில், அனைத்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலும், அதிகாரிகளின் மொபைல் எண்ணுடன், போர்டுகள் வைக்கப்படும்,'' என, கரூர் எஸ்.பி., பகலவன் கூறினார்.


கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், முழு ஊரடங்கையொட்டி, நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்ட எஸ்.பி., பகலவன், போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கு, முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி உணவு கலவையை வழங்கிய பின், நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தொற்று பாதிக்கப்பட்ட ஒரு எஸ்.ஐ., ஒரு போலீஸ் ஆகியோர், பூரண நலம் பெற்று பணிக்கு திரும்பியுள்ளனர். கள்ளச்சாராயம், லாட்டரி, விபசாரம் உள்ளிட்ட சட்டவிதிமுறைகளை மீறி நடக்கும் செயல்களை, அனுமதிக்க முடியாது. இதுகுறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், எஸ்.பி.,- டி.எஸ்.பி.,- இன்ஸ்பெக்டர், ஸ்டேஷன் அலுவலர் ஆகியோரின், மொபைல் எண் கொண்ட போர்டுகள், இரண்டொரு நாளில் வைக்கப்படும். பொதுமக்கள் வருகைக்காக, எஸ்.பி., அலுவலகம் திறந்தே இருக்கும். பொதுமக்கள் புகார் மீது, விசாரணைக்கு அடுத்தப்படியாக, தண்டனைக்குரிய குற்றம் என்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X