உயர் கல்விக்கு வழிகாட்ட ஏ.பி.வி.பி., ஹெல்ப்லைன் மொபைல் எண் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயர் கல்விக்கு வழிகாட்ட ஏ.பி.வி.பி., ஹெல்ப்லைன் மொபைல் எண் வெளியீடு

Added : ஜூலை 20, 2020
Share
கரூர்: அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில், (ஏ.பி.வி.பி.,) உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவ வசதியாக, ?ஹல்ப் லைன் மொபைல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தென் தமிழக ஏ.பி.வி.பி., மாநில செயலாளர் சுசீலா வெளியிட்ட அறிக்கை: ஏ.பி.வி.பி., சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. நடப்பாண்டு,

கரூர்: அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில், (ஏ.பி.வி.பி.,) உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவ வசதியாக, ?ஹல்ப் லைன் மொபைல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தென் தமிழக ஏ.பி.வி.பி., மாநில செயலாளர் சுசீலா வெளியிட்ட அறிக்கை: ஏ.பி.வி.பி., சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. நடப்பாண்டு, கொரோனா காரணமாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலமாக, உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு, ஆலோசனை வழங்க, ஏ.பி.வி.பி., முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்கலை எல்லை வாரியாக, ?ஹல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உயர் கல்வியை தேர்வு செய்வது, எந்தெந்த படிப்புகள், எந்த கல்லூரியில் உள்ளது உள்ளிட்ட விபரங்கள், சந்தேகங்களுக்கு மாணவ, மாணவியர், பெற்றோர் மாவட்ட வாரியாக, கீழ்கண்ட மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். திருச்சி, கரூர், புதுக்கோட்டைக்கு அருண், 83003-12833, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறைக்கு ராஜநாராயணன், 93858-02821, அரியலூர், பெரம்பலூருக்கு சுசீலா, 93451-16367. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X