பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலை பணியாளருக்கு கொரோனா: கிராமங்களில் பொதுமக்கள் மத்தியில் பீதி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கரூர்: தரகம்பட்டியில், 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கிராமங்களில் மக்கள் பீதியில் உள்ளனர்.


கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடவூர் அருகில் தரகம்பட்டி மேற்கு தெருவில், 40 வயது பெண், தரகம்பட்டி தெற்கு தெருவில், 50 வயது பெண், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனை செய்ததில், நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவருடன் வேலை செய்த மற்றும் தொடர்பில் இருந்த, 125 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த நபர்கள் வசித்த தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கிருமிநாசினி மூலம், தூய்மை பணி நடந்து வருகிறது. 100 நாள் பணியாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கிராமத்து மக்கள் பீதியில் உள்ளனர். இதை தவிர, கரூர் சின்ன ஆண்டாங்கோவிலில், 31 வயது பெண், கரூர் அருகம்பாளையம் காந்திநகர், 55 வயது பெண், கரூர் படிக்கட்டுதுறையை சேர்ந்த, 62 வயது பெண், 72 வயது ஆண், கரூர் வாஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, 42 வயது ஆண் உட்பட எட்டு பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X