அரவக்குறிச்சியில் 76.2 மி.மீ., மழை: முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரவக்குறிச்சியில் 76.2 மி.மீ., மழை: முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூலை 20, 2020
Share
கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி வரை அரவக்குறிச்சியில், 76.2 மி.மீ., அணைப்பாளையத்தில், 32 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 9.02 மி.மீ., மழை பதிவானது. அரவக்குறிச்சி வட்டாரத்தில், முருங்கைகாய் சீசன் துவங்கியுள்ள நிலையில், மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று

கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி வரை அரவக்குறிச்சியில், 76.2 மி.மீ., அணைப்பாளையத்தில், 32 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 9.02 மி.மீ., மழை பதிவானது. அரவக்குறிச்சி வட்டாரத்தில், முருங்கைகாய் சீசன் துவங்கியுள்ள நிலையில், மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அமராவதி அணைக்கு வினாடிக்கு, 669 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 44 அடியாக இருந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 9,580 கன அடிதண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 9,160 கன அடி தண்ணீரும், இரண்டு பாசன வாய்க்காலில், 420 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X