சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பச்சை கற்கள் எடுக்க முயற்சி: இருவரிடம் போலீசார் விசாரணை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, மாணிக்கபுரத்தை சேர்ந்தவர் திருமலை கொழுந்து, 50. இவர் தோட்டத்தை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கரூரை சேர்ந்த செங்குட்டுவன், 37, என்பவருக்கு விற்றுள்ளார். இந்த தோட்டத்தை, கரூரை சேர்ந்த தமிழரசன் என்பவர், ஆறு மாதத்திற்கு முன்பு, 10 ஆயிரம் ரூபாய்க்கு குத்தகைக்கு வாங்கியுள்ளார். அந்த இடத்தில், தமிழரசன், திருமலைகொழுந்து ஆகிய இருவரும் நேற்று காலை, 9:00 மணிக்கு பொக்லைன் இயந்திரம் கொண்டு, 15 அடி ஆழத்திற்கு பச்சைகற்கள் எடுக்க குழி தோண்டியுள்ளனர். இதையறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகுடீஸ்வரன், ஆர்.ஐ., முருகானந்தம், மாயனூர் எஸ்.ஐ., சூர்யா ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, பச்சைகற்கள் தோண்ட முயன்ற தமிழரசன், திருமலைகொழுந்து ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X