இரவு நேரத்தில் தவித்த சிறுமி தாயிடம் ஒப்படைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவு நேரத்தில் தவித்த சிறுமி தாயிடம் ஒப்படைப்பு

Added : ஜூலை 20, 2020
Share

கரூர்: கரூர் அருகே, இரவு நேரத்தில் தவித்து கொண்டிருந்த சிறுமியை, மகளிர் போலீசார் அழைத்து சென்று, தாயிடம் ஒப்படைத்தனர். கரூர்-திருச்சி சாலை, காந்தி கிராமம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 12 வயது சிறுமி கையில் பையுடன், தனியாக சுற்றி கொண்டிருப்பதாக, போலீஸ் கட்டுபாடு அறை எண், 100 க்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து, இரவு நேர ரோந்து பணியில் இருந்த, கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சத்தியபிரியா, சம்பவ இடத்துக்கு சென்று, சுற்றி கொண்டிருந்த சிறுமியை அழைத்து விசாரித்தார். அப்போது, அந்த சிறுமி கரூர் மாவட்டம், கடவூர் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும், வீட்டு வேலை செய்யாததால், தாய் திட்டியதால் கோபித்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. பிறகு, மகளிர் போலீசார் அந்த சிறுமிக்கு அறிவுரை கூறி, பெண் போலீஸ் விமலாவுடன், ரோந்து வாகனத்தில் சிறுமியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு தாயிடம் அந்த சிறுமியை, பெண் போலீஸ் விமலா ஒப்படைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X