சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலி கொலை வழக்கு: கொடூர காதலன் கைது

Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
காதலி கொலை வழக்கு: கொடூர காதலன் கைது



பேரூர்: கோவை, பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் எம்.ஆர். கார்டன் வீதியை சேர்ந்தவர் ரதீஷ் 22; மோட்டார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஐஸ்வர்யா,19, என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக ஐஸ்வர்யா ரதீசுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த, 17ம் தேதி, ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்ற ரதீஷ், தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஐஸ்வர்யாவை கத்தியால் குத்தினார். தடுக்க வந்த தந்தை சக்திவேலையும் குத்திவிட்டு தப்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா,18ம் தேதி இறந்தார். தந்தை சிகிச்சையில் உள்ளார். கொலை வழக்கு பதிந்த பேரூர் போலீசார், தனிப்படை அமைத்து, ரதீஷை தேடிவந்தனர். நேற்று இரவு, கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் வைத்து கைது செய்து, பேரூர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜூலை-202019:40:25 IST Report Abuse
skv srinivasankrishnaveni போலீசு மூச்சுகாட்டாமல் மூச்சை நிறுத்துங்க இல்லே கொரோனா வந்து சாவட்டும்
Rate this:
Cancel
Covaxin - Bharat Hindustan,இந்தியா
22-ஜூலை-202013:29:56 IST Report Abuse
Covaxin இந்தப்பயலை பேசாமல் என்கவுண்டர் செய்துவிடலாம்... இவனையெல்லாம் உலகில் விட்டு வைத்தால் இன்னும் யாரையாவது கொல்லுவான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X