ஜல்லி கற்களை வாரி இறைக்கும் லாரிகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்| Dinamalar

ஜல்லி கற்களை வாரி இறைக்கும் லாரிகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Added : ஜூலை 20, 2020
Share

கரூர்: ஜல்லிகளை, அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு, தேசிய நெடுஞ்சாலையில் இறைத்தபடி லாரிகள் செல்வதால் விபத்து ஏற்படுகிறது.


க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில், 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. கல்குவாரிகளில் இருந்து, வெடி வைத்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களை, கிரஷர் மூலம் அரைக்கப்பட்டு அரை, முக்கால், ஒன்றரை, சிப்ஸ் என பல வகைகளில் பிரித்து தயாரிக்கப்படுகிறது. கிரஷர் ஜல்லி கற்களை திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. வீடு, கடைகள் கட்டவும், தார்ச்சாலை அமைக்கவும் பயன்படுத்த தினமும், நூற்றுக்கணக்கான டாரஸ் லாரிகளில் ஜல்லி ஏற்றி செல்கின்றனர். சில லாரிகள், ஜல்லி நிரப்பிய பின், தார்பாய் கொண்டு மூடாமல் அப்படியே செல்கின்றனர். இதனால், லாரி வேகமாக செல்லும் போது ஜல்லி கற்கள் தேசிய நெடுஞ்சாலையில் இரைத்தபடி செல்கிறது. இதனால், பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே, அளவிற்கு அதிகமாக ஜல்லி கற்கள் நெடுஞ்சாலையில் இறைத்தபடி செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X