பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் சுற்றித்திரிந்த 136 பேர் கைது: 87 வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது, அவசியமின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது, 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 87 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க, நேற்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், அவசியமின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது நேற்று, 136 வழக்குகள் பதிந்து, 136 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 87 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மார்ச், 25 முதல், நேற்று வரை மாவட்டம் முழுவதும், 9,700 வழக்குகள் பதிந்து, 12 ஆயிரத்து, 608 பேர் கைது செய்யப்பட்டு, 4,881 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அவசியம் இல்லாமல் சுற்றித் திரிந்தாலோ அல்லது கூட்டமாக கூடியிருந்தாலோ அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இத்தகவலை, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X