பொது செய்தி

தமிழ்நாடு

பதிவறை எழுத்தாளர்களுக்கு ஆய்வக உதவியாளர் பணி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: பதிவறை எழுத்தாளர்களுக்கு, ஆய்வக உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பதிவறை எழுத்தராக பணியாற்றி வருவோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நாமக்கல் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட, அரசு பள்ளிகளில் பணியாற்றிய ஆண், பெண் ஊழியர்கள் என, 10 பேருக்கு வெவ்வேறு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணியாற்றுவதற்கான, உத்தரவு கடிதத்தை மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது, நேர்முக உதவியாளர் முருகேசன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, கண்காணிப்பாளர் கலையரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X