பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கு: பொதுமக்கள் ஒத்துழைப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் நகர் பகுதியில், மூன்றாம் முழு ஊரடங்கான நேற்று, அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.


கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் கடந்த, 5, 12ல் முழு ஊரடங்கில் நாமக்கல் நகர் பகுதி மக்கள், ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தெரிவித்தனர். அதேபோல், மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கில், நகர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், மருந்து கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஒரு சில இரு சக்கர வாகனங்கள் மட்டுமே, போக்குவரத்தில் ஈடுபட்டன. அவர்களை தடுத்து நிறுத்தி, போலீசார் விசாரணை மேற்கொண்டு சரியான காரணம் இருந்தால் மட்டுமே நகருக்குள்ளும், வெளியேவும் அனுமதிக்கப்பட்டனர். நகர் பகுதிகளில், 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நேற்று முழு ஊரடங்கு குமாரபாளையத்தில் அமல்படுத்தப்பட்டது. வழக்கமாக, ஞாயிறன்று மக்கள் கூட்டத்தில் மூழ்கியிருக்கும், தினசரி காய்கறி மார்க்கெட், நேற்று ஆள் நடமாட்டமில்லாமல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த அனைத்து முக்கிய சாலைகளும், ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


* பள்ளிபாளையம் பகுதியில், நேற்று அதிகாலை இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்டவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் காவிரி பாலம், பஸ்நிலையம், பாலம் சாலை, நான்கு சாலை சந்திப்பு மற்றும் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் அமைதியாக வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X