தண்ணீர் தொட்டி அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தொட்டி அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு

Added : ஜூலை 20, 2020
Share

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இந்திராணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேந்தமங்கலம் வட்டாரத்திற்கு, 2020-21ம் ஆண்டிற்கான நுண்ணீர்பாசனம் அமைக்க, மானியம் வழங்கப்படவுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம், பிற விவசாயிகள், 75 சதவீத மானியத்தில் பயன் பெறலாம். பதிவு செய்ய விரும்புவோர், தங்களது ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் நில வரைபடம், கூட்டு வரைப்படம், சிறு குறு விவசாயி சான்று, மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுடன் வர வேண்டும். தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் செங்கோட்டுவேல், 8903565822, பாண்டிதுரை 7373177648, பாஸ்கரன் 9361120860, ஜெகதீசன் 8973806686, ரூபனா 9443454119 ஆகியோரை மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். அல்லது உழவன் செயலி மூலமாக, விவசாயிகள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் பிரதம மந்திரியின் பாசன திட்டத்தின் மூலம், விளை நிலங்களில் நீர் சேமிக்கும் பொருட்டு தண்ணீர் தொட்டி அமைக்க, 40 ஆயிரம் ரூபாய் அல்லது 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மின்விசை இயந்திரம் வாங்குவதற்கு, 15 ஆயிரம் ரூபாய் அல்லது 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. நீர் எடுத்து செல்லும் குழாய் அமைக்க, 10 ஆயிரம் ரூபாய் அல்லது 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X