பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் நேற்று 11 பேருக்கு தொற்று

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 316 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஏற்கனவே, 155 பேர் குணமாகி வீடு திரும்பினர். நேற்று மேலும் ஒன்பது பேர் குணமாகி வீடு திரும்பியதால், அவர்களின் எண்ணிக்கை, 164 ஆக உயர்ந்துள்ளது. திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் இறந்த நிலையில், மீதமுள்ள, 151 பேருக்கு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேலம், கரூர், கோவை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, திருச்செங்கோட்டை சேர்ந்த, 15 வயது சிறுவன், 46 வயது பெண், 34 வயது ஆண், 50 வயது பெண் மற்றும் சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த, 64 வயது மூதாட்டி, பள்ளிபாளையத்தை சேர்ந்த, 40 வயது மில் தொழிலாளி, கொக்கராயன்பேட்டையை சேர்ந்த, 22 வயது இளம்பெண்கள் இருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதவிர, மஸ்கட் சென்று திரும்பிய, நாமக்கல்லை சேர்ந்த, 35 வயது நபருக்கும், ஐதராபாத் சென்று திரும்பிய நவணி ராசாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த, 29 வயது வாலிபருக்கும், பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த, 61 வயது முதியவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 316 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X