சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் மாட்டிறைச்சி கழிவு கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில், சாலையோரம் மாட்டிறைச்சி கழிவுகளை கொட்டிய வாகனத்தை, மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, சேந்தமங்கலம் சாலையில் கொசவம்பட்டி ஏரி உள்ளது. நகரில் செயல்படும் ஆடு, கோழி, மாடு, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைக்காரர்கள் தங்களது கடையில் மீதமாகும் கழிவுகளை, சேந்தமங்கலம் சாலையில் கொட்டி குவிக்கின்றனர். அதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சி நிர்வாகமும், கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இரவு நேரங்களில் கொண்டு வந்து, இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு, 7:00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து, மாட்டு இறைச்சி கழிவுகளை மூட்டைகளாக கட்டி கொண்டு வந்த நபர்கள், ஏரியின் கரையில் போட்டு விட்டுச் சென்றனர். அதை கண்ட அப்பகுதி மக்கள், வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு வந்து, வாகனத்தை மீட்டு, மாட்டு இறைச்சி கொட்டிய நபர்களை எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X