பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல்லில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: மின் கட்டண உயர்வை கண்டித்து, தி.மு.க., சார்பில் வீடுகளில் கறுப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தடுப்புக்கான ஊரடங்கை அரசு பிறப்பித்தது. மக்கள் வெளியே போனதால், கோடிக்கணக்கான ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு கால மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மின்கட்டணத்தை குறைக்க கோரியும், குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தை குறைப்பதற்கு பதில், அந்த தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், நாளை (ஜூலை 21) காலை, 10:00 மணிக்கு கிழக்கு மாவட்டத்திலுள்ள, அனைத்து வீடுகளின் முன், பொதுமக்கள் கறுப்பு கொடி ஏற்றி, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X