பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றித்திரிந்த பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: நேற்று முழு ஊரடங்கை மீறி, குமாரபாளையத்தில் சுற்றித்திரிந்த பொதுமக்களை பிடித்து, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அப்போது, எஸ்.ஐ. முத்துமாரியம்மாள் கூறியதாவது: ஊரடங்கில், காரணமின்றி சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார். இதையும் மீறி இப்படி சுற்றலாமா? ஊரடங்கை அறிவித்த ஒரு நாளாவது, நோய் தொற்று பரவுதல் குறையட்டும் என்பதால்தான், இரு ஞாயிற்றுக்கிழமைகளில் பல வழிகளில் எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த உத்தரவு, உங்களை காத்து கொள்ளத்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இனி, சுற்றித்திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இன்ஸ்பெக்டர் தேவி, குமாரபாளையம் நகரம் மற்றும் புறவழிச்சாலை பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு, வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X