சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவு நீரால் அவதி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கிழக்குரத வீதி,தெற்குரத வீதி இணையும் சந்திக்கும், மலைக்கோவிலுக்கு செல்லும் முகப்புபகுதியில் உள்ள சிறுகல்வெர்ட் பாலத்தில், அடைப்பு எற்பட்டு, சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், தோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பழக்கடை, பூக்கடை, மளிகை கடை உள்ளிட்டவைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள், சாக்கடை கழிவுநீரில் கால்வைத்துதான் சாலையை கடந்து செல்ல முடியும். இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் பகுதி என்பதால், நடந்து செல்லும் பாதசாரிகள் மீது சாக்கடை கழிவு நீரை தெறிக்கிறது. முக்கிய வழித்தட பாதையாக உள்ளது. சாக்கடை கழிவுநீர் சாலையில் செல்வதால், பொதுமக்கள் முகம் சுழித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிறுகல்வெர்ட் பாலத்தை போர்க்கால அடிப்படையில் பராமரிப்பு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X