பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ஆடி அமாவாசை: காவிரி ஆற்றங்கரையில் மக்கள் கூட தடை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் எல்லையில் ஓடும், காவிரி ஆற்றங்கரையில், பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் கரையோரமான குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடர்பாளையம், சோழசிராமணி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கோவில்கள் மற்றும் புண்ணிய தலங்கள் உள்ளன. இப்பகுதிகளில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர், தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. ஒரே இடத்தில், அதிகளவில் மக்கள் கூடுவதால், நோய் தொற்று அதிகம் பரவும் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி, இன்று ஆடி அமாவாசை நாளில், பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில், கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தடை உத்தரவை மீறி, யாரேனும் வந்தால் அவர்கள் மீதும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X