பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுடன் பிறந்த பெண் குழந்தை; கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை தேவை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில், பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், கர்ப்பிணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கரூர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த, 19 வயது பெண் பிரசவத்திற்காக கடந்த, 15ல் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்திய சோதனையில், பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 17ல் பெண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நடந்த சோதனையில், கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. பிறந்த மூன்று நாளில், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை டாக்டர்கள் சிலர் கூறியதாவது: கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், பிறக்கும் குழந்தைகளுக்கும் தொற்று ஏற்பட்ட வாய்ப்பு அதிகம் உள்ளது. கரூர் மாவட்டத்தில், எட்டு கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில், பிறந்த குழந்தைக்கு தொற்று பரவியுள்ளது இது முதல் முறை. கர்ப்பிணி பெண் களுக்கு, நோய் தொற்று பரவும் இடமாக மருத்துவமனை, ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. லாப நோக்கத்துடன் செயல்படும், சில தனியார் மருத்துவமனைகள், தேவையில்லாமல் கர்ப்பிணி பெண்களை அலைக்கழிக்கின்றனர். அறிகுறி இல்லாத கர்ப்பிணி பெண்களுக்கு, கொரோனா சோதனை தேவையில்லை என, அரசு தெரிவித்துள்ளது. இதை மீறி, சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா சோதனை சான்று கேட்டு வற்புறுத்துவதால், பல மருத்துவமனைகளை நோக்கி, பெண்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X