இத்தாலியில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை: வீடியோ

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Italy, Stromboli, Volcano, இத்தாலி, எரிமலை, லாவா, வீடியா

ரோம்: இத்தாலியில் ஸ்ட்ரோம்போலி தீவில் உள்ள எரிமலை, மிகப்பெரிய சத்தத்துடன் திடீரென வெடித்து லாவா குழம்பை கக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

தைரேனியன் கடல்பகுதியில் அமைந்துள்ள 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிர்ப்புடன் உள்ள ஸ்ட்ரோம்போலி தீவில் உள்ள எரிமலை அவ்வப்போது வெடிப்பது வழக்கம். 2016ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஸ்ட்ரோம்போலி தீவில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றன.

இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து பட்டாசு வெடித்து சிதறுவது போன்று லாவா குழம்புகள் சிதறும் காட்சிகள் வெப் கேமராவில் பதிவாகியுள்ளது. நான்கு நிமிடங்கள் வரை நீடித்த எரிமலை வெடிப்பு, வழக்கமான சராசரி எரிமலை வெடிப்பை விட 15 மடங்கு சக்திவாய்ந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


latest tamil news


திடீர் எரிமலை வெடிப்பால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும், எரிமலையின் சாய்விலிருந்து சில குப்பைகள் மற்றும் எரிமலை குழம்புகள் வழிந்து, மக்கள் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதியின் மேல் படிந்துள்ளது என தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜூலை 3ம் தேதி இதே போன்ற எரிமலை வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் தீவில் சிக்கிய சுற்றுலா பயணிகள் கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இரண்டாவது முறையாக, ஆகஸ்ட் 28ம் தேதி எரிமலை வெடித்து சிதறி சுமார் 2 கி.மீ அளவுக்கு புகைமூட்டத்தை கிளப்பியது. ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூலை-202018:21:19 IST Report Abuse
madhavan rajan ராகுலை இந்தியாவில் இருக்கும் இத்தாலிய எரிமலை என்று அழைப்பது சரியாக இருக்கும். அடிக்கடி வெடிக்கிறார் ஆனால் அவரிடமிருந்து சில குப்பைகள் மட்டும் வெளியே விழுந்து அரசுக்கு எந்த ஆபத்துமில்லை என்று உணர்த்துகிறது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-ஜூலை-202017:23:33 IST Report Abuse
Vena Suna வீடியோ எங்கே? வீடியோ என்று போட்டு விட்டு காணோமே ?
Rate this:
Cancel
hasan - tamilnadu,இந்தியா
20-ஜூலை-202012:13:30 IST Report Abuse
hasan மோடி இன்னும் அந்த நாட்டிற்கு சுற்று போனாரா இல்லையா
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-202019:26:04 IST Report Abuse
uthappaஅங்கே நம் நாட்டிற்கு நல்லது செய்ய பொறுப்பில் இருக்கும் ஆட்கள் இல்லையாம். ஆகவே போகவில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X