பொது செய்தி

இந்தியா

'மழை, குளிர் காலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்கும்': ஐ.ஐ.டி., - எய்ம்ஸ் தகவல்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: 'மழை, குளிர்காலங்களில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும்' என, ஐ.ஐ.டி., மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.latest tamil news
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பரவும் வேகம் கட்டுக்குள் இருந்தநிலையில் ஜூன், ஜூலையில் வேகம் அதிகரித்துள்ளது.

'கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் மிக அதிபட்சமாக, 40 ஆயிரத்து 425 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மொத்த பாதிப்பு, 11.18 லட்சத்தைக் கடந்துள்ளது. 27 ஆயிரத்து 497 பேர் உயிரிழந்துள்ளனர்' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிதுள்ளது.


latest tamil newsஇந்நிலையில், புவனேஷ்வரில் உள்ள ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனமும் எய்ம்ஸ் மருத்துவமனையும் சேர்ந்து, கொரோனா பரவல் குறித்து ஆய்வு நடத்தின. அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2003ல் பரவிய சார்ஸ் வைரஸ், 2009ல் பரவிய ஏஹெச்1என்1 இன்ப்ளூயன்ஸா வைரஸ், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் போன்றவை காலநிலைக்கு ஏற்பவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பவும் பரவும் வேகத்தில் மாற்றத்தைச் சந்திப்பவையாகும்.
இந்தியாவில் பரவிவரும கொரோனா வைரஸ் வெயில் காலத்தில் எவ்வாறு இருந்தது, மழை, குளிர் காலங்களில் அதன் பரவும் வேகம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.


latest tamil newsகாலநிலையில் ஏற்படும் மாற்றம் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது. வெயில் அதிகரித்தால் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைய வாய்ப்பு உள்ளது. மழை, குளிர் காலங்களில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் வெயில் காலத்தில் இருந்ததைவிட வேகமாக இருக்கும்.

மழைக்காலத்தில் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை நிலவும். இந்தக் காலகட்டம் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு சாதகமான சூழலாகும். வெப்பம் அதிகரித்தால், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது கொரோனா பரவும் வேகம் குறையும்.
வெயிலில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தால்தால் கூட 0.99 சதவீதம் கொரோனா பரவும் வேகம் குறையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
20-ஜூலை-202018:07:46 IST Report Abuse
RAMESH why the IIT team not ready to find out the native way of petrol and dissel and how to control Chennai traffic, better drainage tem to avoid water log in Chennai area ? already IMR is there to search about corena and share the to public. so you people concentrate in some valid things
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
20-ஜூலை-202014:44:03 IST Report Abuse
Perumal What is the role of IIT in medical survey.Just because they are IIT ,they need not poke their nose in each and everything and panic.They will lose their name and fame.Stupid survey.No one can predict and the prediction they made is on just assumption.
Rate this:
Cancel
Mahesh - Chennai,இந்தியா
20-ஜூலை-202014:16:52 IST Report Abuse
Mahesh We pay tax and they use it for these kindof studies without any valid data....let iit concentrate on modernisation of tech and aims in medicine....don't colloberate now
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X