பிரேசிலில் 21 லட்சம் பேர் பாதிப்பு; 80 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பிரேசிலியா: தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தை தொட்டுள்ளது; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்குகிறது.



latest tamil news




'பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக, 23,529 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில், 716 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதையடுத்து இதுவரை 79,488 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்' என, பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news



'கொரோனாவைப் பற்றி மக்கள் கவலைப்படக் கூடாது. முகக்கவசம் அணியத் தேவையில்லை. மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும்' என, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறி வந்தார். இந்நிலையில், அதிபர் ஜெய்ர் போல்சனோராவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், 'கொரோனா வைரஸ் பரவலின் மையமாக, பிரேசில் விளங்குகிறது. விரைவில் அமெரிக்காவை கடக்க வாய்ப்புள்ளது. அதிபரின் அலட்சியத்தால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு உடனடியாக கடும் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news



சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக, உலக நாடுகளை முடக்கியுள்ளது. உலக அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் உள்ளன. 3, 4வது இடங்களில் வது இந்தியாவும் ரஷ்யாவும் உள்ளன. கொரோனாவால் இந்த நாடுகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ள வேளையில், தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-202017:48:44 IST Report Abuse
ஆப்பு கொஞ்சம் மெதுவா போங்கண்ணே... நாங்க முன்னேறி இரண்டாம் இடத்தை புடிக்க வாணாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X