ரூ.1.47 லட்சம் கோடி கொள்ளையடித்த நிறுவனங்கள்: மத்திய அரசிடம் ராகுல் கேள்வி

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Rahul, rahul gandhi, congress, Banks, ராகுல், வங்கி, வாராக்கடன், கோடி, நிறுவனங்கள், மத்திய அரசு, கேள்வி

புதுடில்லி: வங்கியில் 2,426 நிறுவனங்கள் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ரூ.1.47 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள காங்., எம்பி., ராகுல், அந்த நிறுவனங்கள் மீது மத்திய அரசு விசாரணை நடத்துமா அல்லது நாட்டைவிட்டு தப்பி செல்ல விடுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (ஏஐபிஇஏ) கடந்த இரு நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் உள்ள அரசு வங்கிகளில் மட்டும் 2,426 நிறுவனங்கள் கடன் பெற்று ரூ.1.47 லட்சம் கோடியை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன. இதில் ரூ.200 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 147 நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தக் கடன் தொகையின் மதிப்பு ரூ.67 ஆயிரத்து 609 கோடியாகும். இதில் முதல் 10 இடங்களில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்ற நிறுவனங்களாகும்.


latest tamil news



மொத்தமுள்ள 17 அரசு வங்கிகளில் அதிகபட்சமாக ஸ்டேட் வங்கியில் 685 நிறுவனங்கள், ரூ.43 ஆயிரத்து 887 கோடி மதிப்பிலும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 நிறுவனங்கள், ரூ.22 ஆயிரத்து 370 கோடி மதிப்பிலும் கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை. அதேபோல், பேங்க் ஆப் பரோடாவில் ரூ.14,661 கோடியும், பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.11,250 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.7,028 கோடியும், கனரா வங்கியில் ரூ.5,276 கோடியும், இந்தியன் வங்கியில் ரூ.1,613 கோடியும் பல நிறுவனங்கள் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து காங்., எம்பி., ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: 2,246 நிறுவனங்கள் வங்கியிலிருந்து மக்களின் சேமிப்பான ரூ.1.47 லட்சம் கோடியைக் கொள்ளையடித்துள்ளன. இந்தக் கொள்ளை குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்களைத் தண்டிக்குமா? அல்லது நிரவ் மோடி, லலித் மோடியை நாட்டைவிட்டுத் தப்பவிட்டதுபோல் இவர்களையும் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல மத்திய அரசு அனுமதிக்கப்போகிறதா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202021:43:18 IST Report Abuse
தல புராணம் நீங்க அடிக்காத கொள்ளையா? - இது தான் சங்கிகளின் பதிலாக இருக்கும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
20-ஜூலை-202020:20:39 IST Report Abuse
vbs manian உங்கள் ஆட்சியில் நடந்தை விட பெரிதும் குறைவுதான். தொழில்களுக்கு கடன் கொடுக்கவில்லை என்றல் அதை குறை சொல்கிறார்கள். கொடுத்தால் இப்படி ஸ்வாகா. இதையும் குறை சொல்கிறார். இந்த லட்சணத்தில் மக்களுக்கு மாதம் தோறும் ஏழாயிரத்து ஐநூறு குடுக்க சொல்லி வற்புறுத்தல்.. அந்த பணம் திரும்பி வராது. குழப்பத்தின் உச்சம்..
Rate this:
Cancel
20-ஜூலை-202020:17:21 IST Report Abuse
Ganesan Madurai இவ்வளவு அக்கறையும் அறிவும் உன்னோட ஆட்சியில் மல்லையாவுக்கு ஒரு போன்கால் போட்டவுடனேயே கடன் கொடுக்கும் முன் ஏன் இல்லாமல் போச்சு பப்பூ? அப்ப இந்த பிட்டை எழுதிக் கொடுக்க ஆளில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X