நம்பிக்கை விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பி ஐக்கிய அரபு அமீரகம் சாதனை| UAE successfully launches Arab world's first Mars mission | Dinamalar

'நம்பிக்கை' விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பி ஐக்கிய அரபு அமீரகம் சாதனை

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (4)
Share
துபாய்: உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகம், முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு, 'நம்பிக்கை' என்ற தனது விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்துள்ளது. ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து, ஹெச்2ஏ ராக்கெட் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தின், 'அல் அமால்' என, அரபு மொழியில் பெயரிடப்பட்ட

துபாய்: உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகம், முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு, 'நம்பிக்கை' என்ற தனது விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்துள்ளது.latest tamil news
ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து, ஹெச்2ஏ ராக்கெட் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தின், 'அல் அமால்' என, அரபு மொழியில் பெயரிடப்பட்ட (தமிழில் 'நம்பிக்கை'), 1.3 டன் எடை கொண்ட விண்கலம் அதிகாலை 1:58 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட்டிலிருந்து ஒருமணி நேரத்தில் விண்கலம் தனியாகப் பிரிந்து, அதனுள் இணைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்கள் மூலம் சக்தியைப் பெற்று, சிக்னல்களைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது. இந்தத் தகவலை ராக்கெட்டை வடிவமைத்து அனுப்பிய மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் ஏவுதள நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், துபாயில் உள்ள அல் கவானீஜ் விண்வெளிக் கட்டுப்பாட்டு அறைக்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய விண்கலம் தொடர்ந்து சிக்னல்களை அனுப்பி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news
135 பொறியாளர்கள்; 6 ஆண்டுகள்


இந்த நம்பிக்கை விண்கலத் திட்டத்துக்காக ஐக்கிய அரபு அமீரகம் 20 கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஆறு ஆண்டுகள் 135 பொறியாளர்களின் கடின உழைப்பால் இந்த இது விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதுவரை செவ்வாய் கிரகத்தில் ரோபாவை இறக்கி அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் மட்டுமே ஆய்வு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு முன் 2009, 2013ம் ஆண்டு தென் கொரியாவுடன் இணைந்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பியிருந்தாலும், 2014ம் ஆண்டுதான் சொந்தமாக விண்வெளி மையத்தை அமைத்தது. ஆனால், அடுத்த 6 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் உள்ள ஒரு சிறிய நாடு, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்புவது இதுதான் முதல் முறை.


latest tamil news
50வது ஆண்டு கொண்டாட்டம்


ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நம்பிக்கை விண்கலம் விண்வெளியில் 49.50 கோடி கி.மீ.,களை 201 நாட்களில் கடந்து, 2021ம் ஆண்டு பிப்., மாதம் செவ்வாய் கிரகத்தைச் சென்று சேரும் வகையில் திட்டமிட்டு அனுப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகம் உருவாகி 50வது ஆண்டு கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X