பொது செய்தி

இந்தியா

ஒடிசாவில் அரிய வகை மஞ்சள் ஆமை மீட்பு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புவனேஸ்வர்: ஒடிசாவில் மிகவும் அரிய வகை உயிரினமாக கருதப்படும் ஓடு உள்பட முழுக்க மஞ்சள் நிறத்திலான ஆமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சுஜன்பூர் கிராம மக்கள், மஞ்சள் நிறத்திலான ஆமை ஒன்றை மீட்டுள்ளனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்த கிராம மக்கள், பின்னர் அவர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வனத்துறை கண்காணிப்பாளரான
Odisha, Yellow Turtle, orissa, ஒடிசா, மஞ்சள், ஆமை

புவனேஸ்வர்: ஒடிசாவில் மிகவும் அரிய வகை உயிரினமாக கருதப்படும் ஓடு உள்பட முழுக்க மஞ்சள் நிறத்திலான ஆமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சுஜன்பூர் கிராம மக்கள், மஞ்சள் நிறத்திலான ஆமை ஒன்றை மீட்டுள்ளனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்த கிராம மக்கள், பின்னர் அவர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வனத்துறை கண்காணிப்பாளரான பானூமித்ரா ஆச்சார்யா, ‛ஓடு மற்றும் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக உள்ள ஆமை மீட்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய வகை ஆமை. இது போன்ற ஆமையை இதற்கு முன்னர் நான் பார்த்ததே இல்லை' என கூறியுள்ளார்.


latest tamil news


‛அநேகமாக அது ஒரு அல்பினோவாக இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவில் உள்ளவர்களால் இதுபோன்ற ஒரு வித்தியாசமான ஆமை பதிவு செய்யப்பட்டுள்ளது' என டுவிட்டரில் வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா, மஞ்சள் நிற ஆமை நீரில் நீந்தும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மற்றுமொரு பதிவில், 'அருகில் எடுக்கப்பட்ட அதே ஆமையின் மற்றுமொரு புகைப்படம். அல்பினிசத்தின் அம்சத்தை குறிக்கும் அதன் பிங்க் நிற கண்களை பாருங்கள்' எனவும் கூறியுள்ளார்.


latest tamil news


கடந்த மாதம், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள டியுலி அணையில் மீனவர்களால் அரிய வகை ட்ரையோனிச்சிடே ஆமை பிடிபட்டது. ஆமை பின்னர் வனத்துறை அதிகாரிகளால் அணையில் விடப்பட்டது. ட்ரையோனிச்சிடே ஆமைகள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படும் மென்மையான ஆமைகள் ஆகும். ஆமை 30 கிலோவுக்கு மேல் இருந்ததாகவும், அதன் அதிகபட்ச ஆயுள் 50 ஆண்டுகள் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202021:52:32 IST Report Abuse
தல புராணம் அல்பினோ குறைபாடு - அதாவது இயற்கை நிறத்தை இழந்த தோல் உடையவர்களை போல - உள்ள ஆமை. இக்குணாதிசயத்தை மனிதர்களில் நாம் பார்த்திருக்கிறோம். அவர்களின் தோலில் நிறமி (colour pigment) இல்லாததால் அவர்கள் வெளுப்பாக இருப்பார்கள். வாழ்க்கை முழுவதும் சிரம வாழ்க்கை வாழவேண்டிய கஷ்டம். ஆமையில் முதல்முறையாக இந்தியாவில் காண்கிறோம். இந்திரனின் யானை ஐராவதம் வெள்ளை என்பது இதிகாசம். அது ஆல்பினோ யானையாக இருக்க வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
20-ஜூலை-202019:56:38 IST Report Abuse
kosu moolai ஆமைக்கறி ஸ்பெஷலிஸ்ட்கிட்ட தான் கேட்கனும்
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
20-ஜூலை-202019:40:13 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது 'பிரதமர் மோடி வலிமையான மனிதர் எனும் தோற்றம்தான் இப்போது தேசத்துக்கு மிகப்பெரிய பலவீனம்'-ராகுல் காந்தி விமர்சனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X