பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் இறந்த தாய்; ஜன்னலில் ஏறி கதறி அழுத மகன்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
coronavirus, coronavirus outbreak, COVID-19, கொரோனா, இறந்த, தாய், ஜன்னலில், ஏறி, அழுதார்

புதுடில்லி: கொரோனாவால் இறந்த தனது தாயின் உடலை ஜன்னலில் ஏறி பார்த்து அவரது மகன் அழுத சம்பவம் பலரையும் கவலை அடைய செய்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் பாதித்து இறப்பவர்களின் உடலை உறவினர்களுக்கு கூட கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகமே பாதுகாப்பு நடைமுறைகளுடன் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் உறவினர்கள் பலர் உடலை காண முடியாமல் தவித்துள்ளனர். அதுபோன்ற சோகமான நிகழ்வு ஒன்று பாலஸ்தீன நாட்டில் அரங்கேறி உள்ளது.


latest tamil news



மேற்கு கரையில் பீட் ஆவா பகுதியை சேர்ந்த இளைஞர் ஜிகாத் அல் ஸ்வைட்டி, 73 வயதான கொரோனா பாதிக்கப்பட்ட தனது தாயை பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது தாயார் இறந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ஜிகாத் கதறி அழுதுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தாயின் உடலை கூட அவரால் பார்க்க முடியவில்லை. இதில் மனமுடைந்த ஜிகாத் அங்கிருந்து ஜன்னலில் ஏறி தனது இறந்த தாயின் உடலை பார்த்து அழுதுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-ஜூலை-202016:39:50 IST Report Abuse
இந்தியன் kumar பார்க்க அனுமதிப்பதில் என்ன தவறு இருக்க போகிறது ???
Rate this:
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
20-ஜூலை-202022:29:28 IST Report Abuse
R Sanjay "ஈன்ற பொழுதெனினும் பெரிதெனினும் தன்மகனை சான்றோன் எனகேட்ட தாய்" என்ற குரலை விட தற்சமயம் அந்த தாயின் மனம் உன்னை நினைத்து மிகப்பெரும் பேரானந்தம் கொள்ளும் மகனே. அந்த தாயின் அன்பு நீ உலகம் உள்ளவரை உன்னுடன் இருக்கும் என் கண்கள் குலமுடன் - RSANJAY
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
20-ஜூலை-202019:57:46 IST Report Abuse
mrsethuraman  அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X