சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கருப்பர் கூட்டம் சேனலை முடக்க யுடியூப் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
கருப்பர் கூட்டம், யுடியூப் சேனல், கந்தசஷ்டி, முடக்கம், யுடியூப், போலீசார், கடிதம்

சென்னை : 'கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட, கருப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டுமென யுடியூப்க்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்

ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், கருப்பர் கூட்டம் என்ற, 'யு டியூப் சேனலில்' கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து, வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.தொடர்ந்து, ஹிந்துக்கள் பற்றியும், அவர்கள் வழிபடும் கடவுள்கள் பற்றியும், அவதுாறு பரப்பி, பேட்டிகள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டதால், சமூக விரோதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. 'கருப்பர் கூட்டம்; கருப்பர் தேசம்; செம்புலம் போன்ற, யு டியூப் சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதன் நிர்வாகிகள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனல் நிர்வாகி, சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன், 49; சுரேந்தர் நடராஜன், 38, ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, சென்னையில் உள்ள கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில், அந்த சேனலை முடக்க வேண்டும் என பல தரப்பினர் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, கருப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டுமென யு டியூப் நிறுவனத்தற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
உளறுவாயன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூலை-202022:14:29 IST Report Abuse
உளறுவாயன் already send report ... (karuppar koottam) This channel is Acting on the following offenses .. Indian Penal Code- Defamation of Other Religion IPC-295 Harassment of religious sentiments IPC-295 IPC 153A Attempts to incite religious, ethnic, linguistic, e or religious hatred by speech, writing or gesture
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202022:09:38 IST Report Abuse
தல புராணம் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.. கூகுள்லே இருக்குற கறுப்பர் கூட்டம் பாத்துக்கும்..
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
20-ஜூலை-202022:09:22 IST Report Abuse
Mithun அரை நுற்றாண்டு காலம் தமிழ்நாட்டில் பெரும் சக்திகளாக இருந்த திமுக, திக போன்ற இயக்கங்களை ஒரே வீடியோவில் சமாதி கட்டிய கறுப்பர் கூட்டத்திற்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X