பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரை விரட்டிப்பிடிக்கும் கொரோனா; கோவையில் 6 காவல் நிலையங்கள் மூடல்!

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கோவை: கோவையில் போலீசார் மத்தியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஆறாவதாக இன்று, தொண்டாமுத்தூர் காவல் நிலையமும் மூடப்பட்டது.



latest tamil news




கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, சுகாதாரம், மருத்துவம், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை என, பல்வேறு துறைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதில், போலீசாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு விதி மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்படி மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல நேர்வதால், கோவையில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. போலீசாருக்கு தொற்று ஏற்படுவதால், அவர்கள் பணியாற்றும் காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.


latest tamil news



கடந்த ஏப்., மாதம் போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆறு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்பின், குனியமுத்தூர், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், அன்னூர், கோட்டூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்த போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில், போத்தனூர், குனியமுத்தூர், துடியலூர், சூலூர் மற்றும் உக்கடம் காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியானது; அவர்கள் பணிபுரிந்த காவல் நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் மூன்று போலீசாருக்கு இன்று கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதான போலீசாருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து.


latest tamil news




சுகாதார நிலையமும் மூடல்!


சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கோவையில் கடந்த ஒரு வாரத்தில் 35க்கும் மேற்படட போலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது; இதுவரை ஆறு காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போலீசார் மத்தியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202022:21:09 IST Report Abuse
தல புராணம் வெரட்டி வெரட்டி பிடிச்சி கூட்டம் கூட்டி வெரைட்டி வெரைட்டியா வசூல் பண்றத நிறுத்தணும்..
Rate this:
Cancel
20-ஜூலை-202018:34:29 IST Report Abuse
ஆப்பு வெட்டியா சுத்துறவங்களைத்தான் கொரோனா பாதிக்கும்னு தியரி வெளியிட்டு அடிச்சு முடக்குனாங்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X