அவமானப்படுத்த முயற்சி: சச்சின் பைலட்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
sachin pilot, ashok ghelot, MLA, rajasthan, சச்சின் பைலட், ராஜஸ்தான், அசோக் கெலாட்,

புதுடில்லி : என்னை அவமானப்படுத்தவும், என் மீது அவதூறு பரப்பவுமே குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என காங்கிரஸ் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கிரிராஜ் சிங் கூறுகையில், பா.ஜ.,வில் சேர்வதற்கு சச்சின் பைலட் எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்த நான், பா.ஜ.,வில் இணைய மாட்டேன் என தெரிவித்துவிட்டேன். ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதி குறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடம் தெரிவித்தேன் எனக்கூறினார்.


latest tamil news




இது தொடர்பாக சச்சின் பைலட் கூறியதாவது : இந்த குற்றச்சாட்டுகள் எனக்கு ஆச்சர்யம் எதையும் அளிக்கவில்லை. எனக்கு எதிராக கூறப்படும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் கவலையளிக்கிறது. இது என்னை அவமானபடுத்தவும், கட்சியின் உறுப்பினர், எம்.எல்.ஏ.,வாக நான் ராஜஸ்தான் மாநில தலைமைக்கு எதிராக நியாயமான குற்றச்சாட்டுகளை தடுப்பதற்காகவும் செய்யப்படுகிறது. என் மீது அவதூறு பரப்பவும், எனது நேர்மை மீது சந்தேகம்எழுப்பவும் செய்யப்படுகிறது. முக்கிய பிரச்னைக்கு தீர்வு காணாமல், குற்றச்சாட்டுகளை தெரிவித்து திசைதிருப்பப்படுகிறது. என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவித்த எம்.எல்.ஏ., மீது சட்ட ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202022:19:30 IST Report Abuse
தல புராணம் காங்கிரஸ் ஆடு நனையுதேன்னு பாஜ ஓநாயிங்க கண்ணீர் விடுறதை பாத்தா பாவமா இருக்கு..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202022:18:09 IST Report Abuse
தல புராணம் பைலட் காங்கிரஸ் ஆரம்பிச்சி காங்கிரஸ் "டமால்" ன்னு மலரில் செய்தி போடும் வரை இதை நோண்டிக்கிட்டே இருப்பாங்க சங்கிகள்.. வசுந்தரா சைலண்ட்டாக காங்கிரசில் ஐக்கியம் ஆகப் போறார். அந்த காண்டு தான்..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-ஜூலை-202021:23:52 IST Report Abuse
sankaseshan ஏண்டா ஓரி சச்சினை பற்றிய செய்தியில Pm ஐ வம்புக்கு இழு கிராய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X