பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று 140 பேர் பாதிப்பு; மாவட்ட கலெக்டர் உட்பட 46 பேர் 'டிஸ்சார்ஜ்'

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; பாதிப்புக்கு உள்ளான மாவட்ட கலெக்டர் உட்பட, 46 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று புதிதாக 140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2,183 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



கடந்த ஐந்து நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி உட்பட, 46 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், 22 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் குணமடைந்துள்ளனர்.

கோவையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X