மஹா.,வில் அதிகரிக்கும் கொரோனா ; ஒரே நாளில் 9,518 பேர் பாதிப்பு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து ஒரே நாளில் 9,518 பேர் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை கூறுகிறது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் தொற்று அதிகமான பகுதிகளாக மும்பை, தாராவி, நாக்பூர் மற்றும் நவிமும்பை ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. மஹா.,வில் நேற்று ஒரே நாளில் 9,518 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது மாநிலத்தில் தினசரி பாதிப்புகள் அதிகரித்து 3.1 லட்சத்தை தாண்டியது. மஹா.,வில் இதுவரை கொரோனாவால் 3,10,455 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 258 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் நோய் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 11,854 ஆக அதிகரித்தது.

மஹா.,வில் 10 நாட்களுக்குள் ஐந்தாவது தடவையாக 8,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஒரே நாளில் அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது, ஜூலை 11 முதல் 8,139 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் மொத்த பாதிப்புகளில் தற்போது 1,28,730 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரதுறை தெரிவித்தது. நேற்று 3,906 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்.இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,69,569 ஆக உயர்ந்தது. மும்பையில் நேற்று 1,038 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. மும்பையில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,388 ஆக உயர்ந்தது. அங்கு 23,697 பேர் சிகிச்சையிலும், 71,000 க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டதாகவும் ( 70 சதவீதம் ) கூறப்படுகிறது.


latest tamil news



மும்பையில் 64 பேர் ஒரு நாளில் பலியானதையொட்டி, நகரத்தின் மொத்த பலி எண்ணிக்கை 5,714 ஆக உயர்ந்தது. தற்போது புனே மாவட்டத்தின் பாதிப்புகுள் மும்பையை விட மோசமாகி வருவதாக சுகாதாரதுறை கூறுகிறது. 3000 க்கும் மேற்பட்ட புதிய நோய் பாதிப்புகள் மற்றும் 45 பேர் பலியாகியதுடன் , மொத்த பாதிப்பு 54,624 ஆகவும், பலி எண்ணிக்கை 1,359 ஆகமும் அதிகரித்தது. மாநில சுகாதார அதிகாரிகள் மாவட்டத்தின் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கையை 33,748 ஆகக் கொண்டுள்ள நிலையில், புனே மாவட்ட நிர்வாக அதிகாரிகள், செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 17,000 க்கும் சற்று அதிகமாக இருப்பதாகக் கூறினர்.


latest tamil news



மும்பையில் (BMC) அதிக இறப்புகள் பதிவாகி வருகிறது. தானேவில் 19 பேர் பலியானதை தொடர்ந்து, கொரோனாவுக்கு இதுவரை 835 பேர் பலியாகினர். அதே நேரத்தில் கல்யாண்-டோம்பிவ்லி 22 பலிகளைப் பதிவு செய்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்தது. மாநில கண்காணிப்பு அதிகாரி டாக்டர் பிரதீப் அவதே கூறுகையில், மாநிலத்தின் மீட்பு விகிதம் 54.62% ஆகவும், பாதிப்பு, இறப்பு 3.82% ஆகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X