பொது செய்தி

இந்தியா

டில்லியில் உச்சத்தில் கொரோனா: எய்ம்ஸ் இயக்குநர்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
AIIMS,Delhi,எய்ம்ஸ்,எய்ம்ஸ் மருத்துவமனை,டில்லி, கொரோனா

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் குறிப்பிட்ட பகுதிகளில், கொரோனா உச்சமடைந்துவிட்டதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டில்லியில் 1,22,793 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 16,031 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,628 பேர் மரணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 945 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



இது தொடர்பாக டில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: டில்லியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா உச்சத்தை அடைந்துள்ளது. மற்ற சில பகுதிகளில் உச்சமடைய வேண்டும். குறிப்பிட்ட சில மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு, இனிவரும் நாட்களில் கொரோனா தொற்று உச்சமடையும். டில்லியில் சில இடங்கள் ஹாட்ஸ்பாட்களாக உள்ளன. நகரபகுதிகில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு உள்ளூர் பரவல் நிகழ்ந்து வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை காட்டிலும், இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
21-ஜூலை-202021:45:13 IST Report Abuse
ocean சீனன் குரோனா வைரஸை கோடி கோடியாக உற்பத்தி செய்து அவற்றை காற்று புகாத நூற்றுக்கணக்கான பெரிய டிரமகளில் அடைத்து வைத்து அது சுலபமாக உலகெங்கும் பரவ குளிர் காலத்தை பயன்படுததியுள்ளான். கிருமிகளை அழிக்க வல்ல மூலிகைகளை ஒரு ஆறு மாதம் பெரிய பெரிய அண்டாக்களில் போட்டு ஊறவைத்து கவனித்தால் அதன் அழுகிய நாற்றத்திலிருந்தும் வைரஸ் கிருமிகள் தோன்றும். அதை பெரிய பாட்டில்களில் அடைத்து ஏர் டைட்டாக பல மாதங்கள் மூடி வைத்து திறந்து உலகெங்கும் பரவ விட்டால் அது காற்றில் பரவியுள்ள குரோனாவை எதிர்த்து அழிக்குமா என்பதை சோதனை செய்து பார்க்கலாம்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202022:07:29 IST Report Abuse
oce குரோனா எப்போது தாக்கும் என தெரியாத நிலையில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர் என்ன செய்வது.நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவருக்கு கூட குரோனா தாக்குதல் உள்ளது.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202021:58:50 IST Report Abuse
oce நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அடிக்கடி கூடும் குறையும்.அதை நம்பி குரோனாவை எதிர் கொள்ள இயலாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X