சீனாவில் திறக்கப்பட்ட திரையரங்குகள்: உற்சாகத்தில் மக்கள்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

பீஜிங்: கொரோனா பரவல் காரணமாக சீனாவில் நீண்ட நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் உற்சாகம் அடைந்தனர்.



latest tamil news



சென்ற ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா, தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி உள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா பரவலும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாடுகள் திணறி வருகின்றன. ஆனால், சீனாவில் கொரோனாவால் இதுவரை 86,000 பேர் மட்டுமே பாதிப்பு அடைந்தனர்.4,650 பேர் மட்டும் கொரோனாவுக்கு பலியானார்கள்.

இந்நிலையில் சீனாவில் கொரோனா கட்டுக்குள் வரப்பட்டதையடுத்து அந்நாட்டின் ஷாங்காய், ஹங்சோயு, குய்லின் ஆகிய நகரங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 14 நாட்களாக நோய்த் தொற்று பதிவாகாத இடங்களில் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்த ரசிகர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். தாங்கள் திரையரங்குகளுக்குள் அமர்ந்திருப்பதை செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


latest tamil news



உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக திரையரங்குகள் மூலமாக சீனா அதிக அளவு வருவாயை ஈட்டக் கூடியது. கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டில் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரூ 32,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-202023:27:25 IST Report Abuse
நக்கல் சீக்கிரமே மூடப்படும்....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202022:15:34 IST Report Abuse
தல புராணம் 12 லட்சம் தொற்றுகளுடன் இந்தியா இரண்டாம் இடத்தை நோக்கி.. சங்கிகள் உற்சாகம்.. மோடி பரவசம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X