பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி தனிநபர் நிகழ்ச்சி நடத்தினால் 1 ஆண்டு சிறை: நீலகிரி கலெக்டர் உத்தரவு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Nilgiris,Ooty,நீலகிரி

இந்த செய்தியை கேட்க

ஊட்டி: முறையான அனுமதியின்றி திருமணம் உள்ளிட்ட தனிநபர் நிகழ்ச்சி நடத்தினால், 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் வேகமெடுத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இன்று புதிதாக 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான 339 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news



நீலகிரியில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருமணம் உட்பட தனிநபர் நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் நடத்துபவர்கள் மீது நோய் பரப்புதல், குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் மாஸ்க் அணியாமலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினாலும், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் கீழ், சமூக இடைவெளியை பின்பற்றாத தனிநபர்கள் மற்றும் விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-202023:02:33 IST Report Abuse
ஆனந்தன் சரியான நடவடிக்கை..!! பாராட்டுக்கள்..!!
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202021:44:11 IST Report Abuse
oce குரோனா வந்த பின் மருத்துவ சிகிச்சை பெறுவதை விட அது தொற்று முன் தடுப்பதற்கு வழி தேட வேண்டும். விஷத்தை தாங்கி சென்று பரப்புவது வைரஸ்.
Rate this:
Cancel
யாரோ ஒருத்தன் - CHENNAI,இந்தியா
20-ஜூலை-202021:10:36 IST Report Abuse
யாரோ ஒருத்தன் தனி நபர் நிகழ்ச்சியை தனியார் நடத்தினால்? போலீஸ் பாதுகாப்பு கொடுப்பீர்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X