கொரோனா தடுப்பு மருந்து: ஆக்ஸ்போர்டு பல்கலை., சோதனை வெற்றி| Dinamalar

கொரோனா தடுப்பு மருந்து: ஆக்ஸ்போர்டு பல்கலை., சோதனை வெற்றி

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
Share
Oxford, AstraZeneca, covid19 vaccine

லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின் கொரோனா தடுப்பு மருந்தான 'ஆஸ்ட்ராஜெனிகா' தடுப்பு மருந்து, மனிதர்கள் மீது நடத்தப்பட்ட 3ம் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகத்தை முடக்கியுள்ளது. உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தியும், கட்டுப்பாடுகள் விதித்தும், கொரோனா கட்டுக்குள் வரவில்லை. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் நடைபெற்று வந்தது. இந்தியாவிலும் 7 நிறுவனங்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்களுக்கு போடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.


latest tamil news



இந்நிலையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின், 'ஆஸ்ட்ராஜெனிகா' தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்றுள்ளது. முதல் இரு கட்ட பரிசோதனை வெற்றி பெற்ற நிலையில், மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனை முயற்சியின் முடிவுகள் இன்று வெளியானது. 1077 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில், அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது.

கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள பிரிட்டன், 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, ஆக்ஸ்போர்டு பல்கலை.,யிடம் ஆர்டர் கொடுத்துள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் பிரிட்டன் மக்களுக்கு தடுப்பூசி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X