பொது செய்தி

இந்தியா

மேற்கு வங்கத்தில் கொரோனா ; வாரம் இரண்டு நாள் ஊரடங்கை அமல்படுத்த திட்டம்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் வாரம் இரண்டு நாட்கள் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் தொற்று அதிகமாக உள்ளதால் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தின் மாநில செயலகத்தில் முதல்வர் மம்தா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், மாநிலத்தின் சில பகுதிகளில் கொரோனா தொற்றுக்கான சமூக பரவல் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் இரு நாட்கள் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில உள்துறை செயலர் அலபன் பாண்டியோ பாத்யாய் தெரிவித்தார்.


latest tamil news



அவர் கூறுகையில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாநிலத்தின் முக்கிய வல்லுனர்கள், மருத்துவர்கள், போலீசார் மற்றும் அமலாக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் பரிமாற்ற சங்கிலியை உடைக்க மாநிலம் முழுவதும் வாரம் இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்தவாரம் மேற்கு வங்கம் முழுவதும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கட்டுப்பாட்டு மண்டல அணுகுமுறையை இயக்குவதோடு, முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும். மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் சமூக பரவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு நாட்களில் அனைத்து அலுவலகங்கள், போக்குவரத்து சேவைகள் மூடப்படும்.


latest tamil news



கட்டுப்பாட்டு மண்டலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூலை 31 வரை அமலில் இருக்கும். மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 42,487 ஐ எட்டியதால் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டன. நேற்று நிலவரப்படி, 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது ஒரே நாளின் அதிகபட்ச பாதிப்பாகும். மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 36 பேர் பலியாகினர். இதுவரை மொத்தமாக 1,112 பேர் பலியாகியுள்ளனர். தற்போது மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16,492 ஆக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூலை-202021:11:19 IST Report Abuse
madhavan rajan வாரத்திற்கு ஐந்து நாட்கள் வைரஸைப் பரப்பிவிட்டு இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கச் சொல்கிறார் போலும். சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X