பொது செய்தி

இந்தியா

அசாம் வெள்ளம்: 70 லட்சம் பேர் பாதிப்பு; 110 பேர் உயிரிழப்பு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கால் மாநிலம் முழுவதும் 70 லட்சத்தி்ற்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். 110 பேர் உயிரிழந்தனர்.



latest tamil news



கனமழை காரணமாக மாநிலத்தின் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். வெள்ளத்தால் மக்கள் மட்டுமின்றி அங்குள்ள காசிரங்கா தேசிய பூங்கா விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தேசிய பூங்காவின் 85 சதவீத பரப்பளவு நீரில் மூழ்கி உள்ளன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குள் உயிரிழந்துள்ளன. இதுவரை 9 காண்டாமிருகங்கள் பலியாகி உள்ளன. வனத்திலிருந்து தப்பிய விலங்குகள் சாலைகளில் சுற்றித்திரிவதோடு ஊருக்குள் தஞ்சம் அடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் ஹெக்டர் நிலம் நீரில் மூழ்கி உள்ளது.


latest tamil news



வெள்ளப்பெருக்கு குறித்து மத்திய நீர் ஆணையம் கூறியதாவது, ' பிரம்மபுத்திரா நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதன் நீரோட்ம் மேலும் 21 செ.மீ., உயரும். பிரம்மபுத்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது காசிரங்கா தேசிய பூங்காவில் 1055 சதுர கி.மீ., அளவுக்கு நீரில் மூழ்கும். காசிரங்கா தேசிய பூங்காவில் பத்துவருடங்களுக்கு ஒரு முறை தான் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தற்போது பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.


latest tamil news



2016ம் ஆண்டு தொடங்கி 2020க்குள் பலமுறை காசிரங்காவில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஆரோக்கியமான விலங்குகள் மேடான இடங்களுக்கு இடம் பெயர்ந்து தங்களை காத்துக் கொள்கின்றன. வயதான, ஆரோக்கியம் குறைந்த விலங்குகளே வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்கி்ன்றன' இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள அசாம் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜூலை-202000:12:35 IST Report Abuse
தமிழ்வேல் கொரோனா சாவுகளுக்கு கூறியதைப்போலவே, வயதான, ஆரோக்கியம் குறைந்த விலங்குகளே வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்கி்ன்றன' என்று கூறி சந்தோஷப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X